ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஆண்டி முர்ரே 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
முர்ரே முதல் இரு செட்களை இழந்தாலும், சுதாரித்துக் கொண்டு கடைசி 3 செட்களை கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.;
மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, ஆஸ்திரேலியாவின் தனாசி கோகிநாகிசுடன் மோதினார்.
இதில் முர்ரே முதல் இரு செட்களை இழந்தார். அடுத்து சுதாரித்துக் கொண்ட அவர் கடைசி 3 செட்களை கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இறுதியில் முர்ரே 4-6, 6-7, 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.