ஒலிம்பிக் தொடருடன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு - ஆண்டி முர்ரே அறிவிப்பு
33-வது ஒலிம்பிக் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.;
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில் டென்னிஸ் போட்டிகளில் முன்னணி வீரரான ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆண்டி முர்ரே, பாரீஸ் ஒலிம்பிக் தொடருடன் டென்னிசிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "எனது கடைசி டென்னிஸ் போட்டிக்காக பாரீஸ் வந்துள்ளேன். நாட்டிற்காக போட்டியிட்டது எனது வாழ்க்கையின் மறக்கமுடியாத வாரங்களாகும், கடைசியாக அதைச் செய்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.
ஆண்டி முர்ரே ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது