உலக ஜூனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சங்கர் முத்துசாமி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி தாய்லாந்தின் பேனிட்சாபோன் டீராராட்சகுலுடன் மோதினார்.;
சாண்டேன்டர்,
உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஸ்பெயினின் சாண்டேன்டர் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி ,தாய்லாந்தின் பேனிட்சாபோன் டீராராட்சகுலுடன் மோதினார்.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய .சங்கர் முத்துசாமி 21-13,21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.இதனால் சென்னையைச் சேர்ந்த சங்கர் முத்துசாமி உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.