உலக ஜூனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சங்கர் முத்துசாமி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

தமிழக வீரர் சங்கர் முத்துசாமி அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.;

Update:2022-10-29 02:35 IST

சாண்டேன்டர்,

உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஸ்பெயினின் சாண்டேன்டர் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி 21-18, 8-21, 21-16 என்ற செட் கணக்கில் ஹூ ஷி அன்னை (சீனா) தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

இந்த ஆட்டம் 1 மணி 31 நிமிடங்கள் நீடித்தது. இதன் மூலம் சென்னையைச் சேர்ந்த சங்கர் முத்துசாமிக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் உறுதியாகியுள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெல்லும் 10-வது பதக்கம் இதுவாகும்

கடைசியாக இந்திய வீரர்களில் லக்‌ஷயா சென் 2018-ம் ஆண்டு உலக ஜூனியர் பேட்மிண்டனில் வெண்கலம் வென்றிருந்தார். சங்கர் முத்துசாமி அரைஇறுதியில் தாய்லாந்தின் பேனிட்சாபோன் டீராராட்சகுலுடன் மோதுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்