உலக ஜூனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சங்கர் முத்துசாமி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமி தாய்லாந்து வீரரை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.;

Update:2022-10-30 04:03 IST

சாண்டேன்டர்,

உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஸ்பெயின் நாட்டில் உள்ள சாண்டேன்டர் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி, தாய்லாந்தின் பேனிட்சாபோன் டீராராட்சகுலை சந்தித்தார்.

40 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-13, 21-15 என்ற நேர்செட்டில் பேனிட்சாபோன் டீராராட்சகுலை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக ஜூனியர் பேட்மிண்டன் தொடரில் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற 4-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்