கைப்பந்து லீக்: கோழிக்கோடு அணி 4-வது வெற்றி
9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.;
சென்னை,
9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 15-13, 18-16, 16-14 என்ற நேர் செட் கணக்கில் ஐதராபாத் பிளாக் ஹாக்சை தோற்கடித்தது. 5-வது ஆட்டத்தில் ஆடிய கோழிக்கோடு அணி 4-வது வெற்றியை ருசித்தது. ஐதராபாத் அணிக்கு இது 5-வது தோல்வியாகும்.
இன்றைய ஆட்டங்களில் கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ்- டெல்லி டூபான்ஸ் (மாலை 6.30 மணி), ஆமதாபாத் டிபென்டர்ஸ்- கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.