யு-20 உலக தடகள சாம்பியன்ஷிப்: வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஆர்த்தி
இந்த தொடரில் இந்தியாவின் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.;
லிமா,
20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் பெரு நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் 1000 மீ நடை ஓட்டப்பந்தய போட்டியில் இந்தியாவை சேர்ந்த 17 வயது வீராங்கனையான ஆர்த்தி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த தொடரில் இந்தியாவின் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சீன வீராங்கனைளான ஜூமா பைமா (43:26.60), மெய்லிங் சென் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினர்.