இந்திய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றுடன் வெளியேறிய லக்சயா சென், பிரனாய்

இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சீனதைபேவின் சு லீ யாங்கை எதிர்கொண்டார்.;

Update:2025-01-16 04:15 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சீனதைபேவின் சு லீ யாங்கை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட 21-16, 18-21, 12-21 என்ற செட் கணக்கில் சு லீ யாங்கிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். இதே பிரிவில் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், சீன தைபேவின் லின் சுன் யியியை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 15-21, 10-21 என்ற செட் கணக்கில் லின் சுன் யியி-யிடம் தோல்வி கண்ட லக்சயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்