தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் இந்தோனேசியா - சீனா அணிகள் மோதல்
ஆண்களுக்கான 33வது தாமஸ் கோப்பை, பெண்களுக்கான 30வது உபேர் கோப்பை பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகிறது.;
செங்டு,
ஆண்களுக்கான 33வது தாமஸ் கோப்பை மற்றும் பெண்களுக்கான 30வது உபேர் கோப்பை பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 10 முறை சாம்பியனான சீனா அணி 31 என்ற கணக்கில் மலேசியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரைஇறுதியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியா அணி 30 என்ற கணக்கில் சீன தைபேயை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சீனாஇந்தோனேசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதேபோல் இன்று நடைபெறும் பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியிலும் சீனாஇந்தோனேசியா அணிகள் சந்திக்கின்றன. அரைஇறுதியில் 15 முறை சாம்பியனான சீனா 30 என்ற கணக்கில் ஜப்பானையும், 3 முறை சாம்பியனான இந்தோனேசியா 32 என்ற கணக்கில் தென்கொரியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடித்து வைத்தன.