தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி காலிறுதிக்கு தகுதி

ஆண்களுக்கான 33-வது தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகிறது.;

Update:2024-04-30 04:31 IST

Image Courtesy: @BAI_Media

செங்டு,

ஆண்களுக்கான 33-வது தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகிறது. இதில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை துவம்சம் செய்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்து காலிறுதியை உறுதி செய்தது. முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தை வீழ்த்தி இருந்தது.

இந்திய அணியில் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ்.பிரனாய், ஸ்ரீகாந்த், கிரண் ஜார்ஜூம், இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, எம்.ஆர்.அர்ஜூன்- துருவ் கபிலா இணையும் தங்கள் ஆட்டங்களில் வெற்றி கண்டனர். இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை சந்திக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்