மாநில ஜூனியர் தடகள போட்டி; கிருஷ்ணகிரியில் 4 நாட்கள் நடக்கிறது
கிருஷ்ணகிரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வருகிற 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.;
சென்னை:
தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கிருஷ்ணகிரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வருகிற 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. 14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் இருபாலருக்கும் போட்டி நடத்தப்படுகிறது.
இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் tnathleticassociation.com என்ற இணையவழி மூலமாக தங்களது பெயரை பதிவு செய்யலாம்.
இந்த போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெறும் 33-வது தென் மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த தகவலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.