உலகக்கோப்பை செஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் தமிழக வீரர் குகேஷ்

தமிழக வீரர் குகேஷ், உலகக்கோப்பை செஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Update: 2023-08-13 14:35 GMT

image tweeted by @FIDE_chess

பாகு,

'பிடே' உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் தமிழக வீரரான குகேஷ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வாங் ஹாவுடன் இன்று மோதினார்.

இந்த போட்டியில் வெற்றிபெற்ற குகேஷ், காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதன்படி, வருகிற 15ந்தேதி நடக்கும் காலிறுதி போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை குகேஷ் எதிர்கொள்கிறார்.  

Tags:    

மேலும் செய்திகள்