ஆக்கி போட்டிக்கான வீரர்கள் தேர்வு

தேசிய ஜூனியர் அகாடமி சாாபில் ஆக்கி போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடந்தது.;

Update:2023-10-25 00:45 IST


தேசிய ஜூனியர் அகாடமி ஆக்கி போட்டி வருகிற நவம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 30-ந்் தேதி வரை தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு நீலகிரி மாவட்டத்திலிருந்து ஆக்கி வீரர்களை தேர்வு செய்யும் ஆக்கி போட்டி ஹாக்கி நீலகிரிஸ் அமைப்பின் சார்பில் குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நீலகிரி மாவட்டத்திலுள்ள 23 அமைப்புகள் கலந்து கொண்டன. போட்டியின் இறுதியில் போட்டியில் கலந்து கொள்ள 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் ஒரு வார கால பயிற்சி அளிக்கப்படும்.

போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சியில் நீலகிரிஸ் ஆக்கி அமைப்பின் தலைவர் அனந்தகிருஷ்ணன், துணைத் தலைவர் சுரேஷ்குமார், பொருளாளர் ராஜா, போட்டி தேர்வர் சந்திரன், தேசிய ஆக்கி நடுவர் பிரசாந்த்மணி, அறிஞர் அண்ணா பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தரி ஆகியோர் கலந்து ெகாண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்