ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் முதல் இந்திய தலைவராகிறார் ரன்தீர் சிங்

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் முதல் இந்திய தலைவராக ரன்தீர் சிங் நியமிக்கப்பட உள்ளார்.;

Update:2024-07-23 10:02 IST

Image Courtesy: AFP 

புதுடெல்லி,

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் முன்னாள் உறுப்பினரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான 77 வயதான ரன்தீர் சிங், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் (ஓ.சிஏ.) புதிய தலைவராகிறார்.

இந்த பதவிக்கு வரும் செப்டம்பர் 8-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அவரை தவிர வேறு யாரும் போட்டியில் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக, தற்போது பொறுப்பு தலைவராக செயல்படும் பஞ்சாப்பைச் சேர்ந்த ரன்தீர் சிங், ஓ.சி.ஏ-யின் தலைவர் பதவியை அலங்கரிக்கப்போகும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்