உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

புள்ளிகள் அடிப்படையில் கார்ல்சன் கிரிப்டோ கோப்பை செஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.;

Update:2022-08-22 10:19 IST

மியாமி,

கிரிப்டோ கோப்பை செஸ் தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். மியாமி நகரில் நடைபெற்ற இந்த தொடரில் ஏழு சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா இரண்டாமிடம் பிடித்தார்.

முன்னதாக பிரக்ஞானந்தா இந்தப் போட்டியில் 4 ரேபிட் கேம்களில் கார்ல்சனை வீழ்த்தி 3 புள்ளிகள் பெற்றிருந்தால் கார்ல்சனை வீழ்த்தி சாம்பியன் ஆகியிருப்பார். ஆனால் ஆட்டம் டை பிரேக்கிற்குச் சென்றதால் கார்ல்சன் சாம்பியன் ஆனார். டைப்பிரேக்கரில் பிரக்ஞானந்தா வென்று இரண்டாம் இடம் பிடித்தார்.

பிரதான போட்டி 2-2 என டிரா ஆனநிலையில் டை பிரேக்கரில் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை நிகழ்த்தி உள்ளார். நடப்பாண்டில் 3வது முறையாக உலக சாம்பியன் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்