தமிழக வீரர் ஜெஸ்வின் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.;
புதுடெல்லி,
ஒலிம்பிக் போட்டி 26-ம் தேதி பாரீசில் தொடங்குகிறது. இதில் தடகளத்தில் உலக தரவரிசை கோட்டா அடிப்படையில் மேலும் சில இடங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
இதன்படி நீளம் தாண்டுதலில் தேசிய சாதனையாளரான தமிழகத்தை சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை அங்கிதா தயானி ஆகியோர் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களையும் சேர்த்து பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்களின் எண்ணிக்கை 30 ஆக உயருகிறது.