பாரா ஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்
பாரா ஒலிம்பிக் பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா வெண்கலப்பதக்கம் வென்றார்.;
பாரீஸ்,
மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தையம் நடைபெற்றது.
இதில் இந்திய வீராங்கணை சிம்ரன் சர்மா பங்கேற்றார். அவர் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 24.75 வினாடிகளில் கடந்து 3ம் இடம் பிடித்தார். இதன் மூலம் சிம்ரன் சர்மா வெண்கலப்பதக்கம் வென்றார்.
இதையடுத்து, பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது.