பாரா ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டம்; இந்திய வீராங்கனை சிம்ரன் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரா ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.;

Update:2024-09-05 01:53 IST

பாரீஸ்,

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் மகளிர் 100 மீட்டர் டி-12 முதல் சுற்று ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா 12.17 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்