பாரா ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்ற சச்சின் சர்ஜிராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய அணி இதுவரை 21 பதக்கங்களைப் பெற்று 19-வது இடத்தில் உள்ளது.

Update: 2024-09-04 11:32 GMT

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான குண்டு எறிதல் எப். 46 பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.32 மீட்டர் தூரம் எறிந்து 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்ற சச்சின் சர்ஜிராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பாரா ஒலிம்பிக் தொடரில் வலிமையுடன் செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த சச்சின் சர்ஜிராவுக்கு வாழ்த்துகள்.அவரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. என தெரிவித்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்று 19-வது இடத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்