பாரா ஒலிம்பிக்: குண்டு எறிதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 21 பதக்கங்களைப் பெற்றுள்ளது.;

Update:2024-09-04 15:38 IST

image courtesy: Narendra Modi twitter

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான குண்டு எறிதல் எப். 46 போட்டியில் இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.32 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

16.38 மீட்டர் தூரம் எறிந்த கனடா வீரர் ஸ்டீவர்ட் கிரெக் தங்கப் பதக்கமும், 16.27 மீட்டர் தூரம் எறிந்த குரோசிய வீரர் பகோவிக் லூகா வெண்கலப் பதக்கமும் வென்றனர். பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்று 19-வது இடத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்