பாரா ஆசிய விளையாட்டு ; தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்...!
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.;
ஹாங்சோ,
பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில் இன்று நடைப்பெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் சைலேஷ் குமார் தங்கப்பதக்கம், மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினர்.
மேலும், மகளிருக்கான படகுப்போட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். தற்போது வரை இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்று 7 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.