ஊட்டி கோல்ட்ஸ் அணி வெற்றி

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஊட்டி கோல்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.;

Update:2023-10-23 01:00 IST


நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏ டிவிஷன் (முதல் டிவிஷன்) பிரிவிற்கான லீக் போட்டியில் ஊட்டியைச் சேர்ந்த கோல்ட்ஸ் கிரிக்கெட் அணி மற்றும் கூடலூர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோல்ட்ஸ் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. இந்த அணியின் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பரத் 11 பவுண்டர்கள் மற்றும் மூன்று சிக்சர்களுடன் சதமடித்து 111 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் ரிஷப் ராஜ் 44 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து 210 பந்துகளில் 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து ஆடிய கூடலூர் அணி 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த அணி வீரர்கள் பிரவீன் ஜி சேகர் 46 ரன்கள், ஜெயசூர்யா 26 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் ஊட்டி கோல்ட்ஸ் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்