துபாயில் மினி மாரத்தான் போட்டி; தமிழக வீராங்கனை 2-வது இடம்
பெண்களுக்கான அனைத்து பிரிவுகளிலும் தமிழகத்தை சேர்ந்த லிடியா ஸ்டாலின் 2-ம் இடத்தை பெற்று சாதனை புரிந்தார்.
துபாய்,
துபாயில் தொடங்கியுள்ள பிட்னெஸ் சேலஞ்ச் உடற்பயிற்சி சவால் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சர்வதேச நிதி மையத்தில் இருந்து நேற்று மாய் துபாய் மினி மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. மொத்தம் 5 கி.மீ. தொலைவுக்கு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இந்த போட்டியில் பெண்களுக்கான அனைத்து பிரிவுகளிலும் தமிழகத்தை சேர்ந்த லிடியா ஸ்டாலின் 2-ம் இடத்தை பெற்று சாதனை புரிந்தார். போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.