பேட்மிண்டன் - காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி
ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் இந்திய பெண்கள் அணி காலிறுதிக்கு முன்னேறியது. தொடக்க சுற்றில் மங்கோலியாவை 3-0 என்ற கணக்கில் வென்று இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
டேபிள் டென்னிஸ் ஆவுண்ட் ஆப் 16 இரட்டையர் கலப்பு பிரிவு போட்டியில் இந்தியா- தாய்லாந்து மோதின. இதில், 3-0 (11-4, 11-6, 12-10) என்ற செட் கணக்கில் தாய்லாந்து வெற்றிப்பெற்றது.
துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆண்கள் அணி ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றுக்கான போட்டியில் வென்ற அர்ஜூன் சீமா, சராப்ஜோட் சிங் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டி: ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டலில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.
வுஷூ: மகளிர் 60 கிலோ இறுதி சுற்று போட்டியில் இந்தியாவின் ரோஷிபினா தேவிக்கு வெள்ளி பதக்கம்
வுஷூ: இரண்டாம் சுற்றிலும் வூ வெற்றி பெற்றார் என நடுவர் அறிவித்துள்ளார்.
வுஷூ: முதல் சுற்றில் 1-0 என்ற புள்ளி கணக்கில் வூ வெற்றி பெற்றார்.
வுஷூ: மகளிர் 60 கிலோ இறுதி சுற்று போட்டியில் இந்தியாவின் ரோஷிபினா தேவி, சீனாவின் வூ ஜியோவெய்யை எதிர்த்து விளையாடி வருகிறார்.
துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு குழு போட்டி: ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்றுக்கான போட்டி தொடங்கியுள்ளது.
இதில், அர்ஜுன் சிங் சீமா, சரப்ஜோத் சிங் மற்றும் சிவா நார்வால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த போட்டியின் முதல் தொடரில், அர்ஜுன் 97 புள்ளிகள், சிவா 92 புள்ளிகள், சரப்ஜோத் சிங் 95 புள்ளிகள் பெற்றுள்ளனர்.
துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு குழு போட்டி: ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்றுக்கான போட்டி தொடங்கியுள்ளது.