கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு: தமிழக கைப்பந்து அணிகள் 'சாம்பியன்'

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் தமிழக கைப்பந்து அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.;

Update:2022-06-09 05:14 IST

பஞ்ச்குலா,

4-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவு இறுதிசுற்றில் தமிழக அணி 3-1 என்ற செட் கணக்கில் அரியானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதன் பெண்கள் பிரிவில் தமிழக அணி 3-2 என்ற செட் கணக்கில் அரியானாவை சாய்த்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

Tags:    

மேலும் செய்திகள்