உலக இளையோர் பளுதூக்குதல்: இந்தியாவுக்கு 2 வெள்ளிப்பதக்கம்
உலக இளையோர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் நடந்து வருகிறது.;
புதுடெல்லி,
உலக இளையோர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 40 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அகன்ஷா 'ஸ்னாட்ச்' முறையில் 59 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 68 கிலோவும் என மொத்தம் 127 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதேபோல் ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் விஜய் பிரஜாபதி 'ஸ்னாட்ச்' முறையில் 78 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 97 கிலோவும் என மொத்தம் 175 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.