புரோ கபடி லீக்: ஈரான் வீரர் ரூ.2.35 கோடிக்கு ஏலம்
புரோ கபடி லீக் போட்டிக்கான ஏலத்தில் அதிகபட்சமாக ஈரான் அணியின் கேப்டன் ஷட்லோய் சியானேஷ் ரூ.2.35 கோடிக்கு ஏலம்போனார்.;
மும்பை,
புரோ கபடி லீக் போட்டிக்கான 2 நாள் ஏலம் மும்பையில் நேற்று தொடங்கியது. வீரர்கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக ஈரான் அணியின் கேப்டன் ஷட்லோய் சியானேஷ் ரூ.2.35 கோடிக்கு ஏலம்போனார். அவரை புனேரி பால்டன் அணி வாங்கியது.
இந்தியாவைச் சேர்ந்த மொகிந்தர் சிங்குக்கும் கடும் கிராக்கி காணப்பட்டது. இறுதியில் அவரை ரூ.2.12 கோடிக்கு பெங்கால் வாரியர்ஸ் தட்டிச் சென்றது. மற்றொரு ஈரான் வீரர் பாசல் அட்ராசலியை ரூ.1.6 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணி எடுத்தது. அதே சமயம் சந்தீப் நார்வல், தீபக் நிவாஸ் ஹூடா, சச்சின் நார்வல், அஜிங்யா காப்ரே, விஷால் பரத்வாஜ் உள்ளிட்டோர் முதல் நாளில் ஏலம் போகவில்லை.