சர்வதேச பெண்கள் செஸ் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்
சர்வதேச பெண்கள் கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி இன்று தொடங்கி 25-ந்தேதி வரை சென்னை போரூரில் உள்ள ஓட்டலில் நடக்கிறது.;
சென்னை,
வேலம்மாள் கல்வி நிறுவனம் ஆதரவுடன் சர்வதேச பெண்கள் கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி இன்று தொடங்கி 25-ந்தேதி வரை சென்னை போரூரில் உள்ள ஓட்டலில் நடக்கிறது. இந்த போட்டியில் உர்ட்சாய்க் உரின்துயா (மங்கோலியா), மரியா மனகோவா (செர்பியா), நினோ மைசுராட்ஸி (பிரான்ஸ்), இந்தியாவின் வெல்புலா சரயு, மேரி அன் கோம்ப்ஸ், அக்ஷயா மவுனிகா, மோனிஷா உள்பட 12 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
அவர்கள் ரவுண்ட்-ராபின் முறையில் 11 சுற்றில் மோதுவார்கள். மொத்தம் ரூ.10 லட்சம் பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு ரூ.2½ லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.