சர்வதேச கிக் பாக்சிங்: தமிழக வீரருக்கு தங்கப்பதக்கம்
சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் இந்திய தரப்பில் 17 பேர் கலந்து கொண்டு 4 பதக்கங்களை வென்றனர்.;
சென்னை,
சர்வதேச கிக் பாக்சிங் போட்டி (கால்களால் எட்டிஉதைக்கும் குத்துச்சண்டை) துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்தது. இதில் 42 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இந்திய தரப்பில் 17 பேர் கலந்து கொண்டு 4 பதக்கங்களை வென்றனர். இவற்றில் தமிழக வீரர் பரத்விஷ்ணு அனைத்து சுற்றிலும் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்ததும் அடங்கும்.
14 வயதான பரத் விஷ்ணு தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரைச் சேர்ந்தவர் ஆவார். தாயகம் திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைமை பயிற்சியாளர் சி.சுரேஷ்பாபு, தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்கத்தின் பெண்கள் கமிட்டி சேர்மன் டாக்டர் ஆர்த்தி உள்ளிட்டோர் அவரை பாராட்டினர்.