எகிப்தில் நடக்கும் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து இந்தியா விலகல்

எகிப்தில் நடக்கும் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகுவதாக அகில இந்திய செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.;

Update:2023-10-14 01:51 IST

சென்னை,

உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் இன்று முதல் 23-ந்தேதி வரை நடக்க உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து 8, 10, 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் 39 வீரர்கள் கலந்து கொள்வதாக இருந்தது.

ஆனால் இந்த போட்டி நடக்கும் நகரம் இஸ்ரேல் எல்லையில் இருந்து 400 கிலோமீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடந்து கொண்டிருப்பதால், பாதுகாப்பு கருதி இந்த போட்டியில் இருந்து இந்தியா விலகியது. இந்த தகவலை அகில இந்திய செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்