ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்; முதல் சுற்றில் தோல்வி கண்ட பிரியன்ஷு ரஜாவத்
இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதினார்.;
ஹாங்காங்,
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தகுதிசுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து, முதல் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கின. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 21-9 என்ற புள்ளிக்கணக்கில் டகுமா ஒபயாஷியும், 2வது செட்டை 21-16 என்ற புள்ளிக்கணக்கில் பிரியன்ஷு ரஜாவத்தும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட் பரபரப்பாக நடைபெற்றது.
இதில் அபாரமாக செயல்பட்ட டகுமா ஒபயாஷி 21-9 என்ற புள்ளிக்கணக்கில் பிரியன்ஷு ரஜாவத்தை வீழ்த்தினார். இறுதியில் 9-21, 21-16, 9-21 என்ற புள்ளிக்கணக்கில் பிரியன்ஷு ரஜாவத் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.