ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது
இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய ஜோடிகள் தோல்வி அடைந்தன.;
கோலூன்,
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோலூன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 8-21, 14-21 என்ற நேர்செட்டில் இந்தோனேசியாவின் அப்ரியானி ரஹாயூ-சித்தி பாட்டியா சில்வா இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.
இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா இணை 18-21, 7-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் மாயு மட்சுமோட்டோ-வகானா நகஹரா கூட்டணியிடம் வீழ்ந்து நடையை கட்டியது. ஏற்கனவே ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வியை தழுவிய நிலையில், இரட்டையர் பிரிவிலும் தோல்வி அடைந்ததன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.