ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: தகுதி சுற்றில் கிரண்ஜார்ஜ் தோல்வி
முதல் மற்றும் 2-வது ஆட்டங்களில் ஹங்காங்கின் ஜாசன் குனாவானிடம் தோற்று நடையை கட்டினர்.;
கோலூன்,
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோலூன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் தகுதி சுற்றின் 2-வது ஆட்டத்தில் கடந்த வாரம் நடந்த இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் 20-22, 21-14, 14-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஜூன் ஹாவ் லியோங்கிடம் தோற்று பிரதான சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார். இதேபோல் இந்திய வீரர்கள் மிதுன் மஞ்சுநாத், ரவி ஆகியோர் முறையே முதல் மற்றும் 2-வது ஆட்டங்களில் ஹங்காங்கின் ஜாசன் குனாவானிடம் தோற்று நடையை கட்டினர்.
இன்று நடக்கும் பிரதான சுற்று ஆட்டங்களில் லக்ஷயா சென், பிரியன்ஷூ ரஜாவத், மாள்விகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப் உள்ளிட்ட இந்தியர்கள் களம் இறங்குகிறார்கள்.