பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் மற்றும் சாத்விக்- சிராக் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.;
பாரிஸ்,
பிரெஞ்ச் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரானது பிரான்சு நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் செவ்வாய்கிழமை நடைபெற்ற போட்டியில் உலகின் நம்பர் 1 ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடியானது தரவரிசையில் 34 வது இடத்தில் உள்ள லூகாஸ் கோர்வி மற்றும் ரோனன் லாபர் ஜோடியுடன் மோதியது.
மொத்தம் 35 நிமிடங்களுக்கு நீடித்த இந்த போட்டியில் 21-13, 21-13 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியது.
இந்த ஜோடி அடுத்ததாக மூன்று முறை உலக சாம்பியனான இந்தோனேசியாவின் முகமது அஹ்சன் மற்றும் ஹென்ட்ரா செட்டியவான் ஆகியோரை சந்திக்கின்றனர்.