காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான ஆக்கி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி 4-4 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

Update: 2022-08-01 17:25 GMT

பர்மிங்ஹாம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.ஒட்டுமொத்தமாக இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்நிலையில் இன்று ஆண்களுக்கான ஆக்கி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் லலித் உபாத்யாய் முதல் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதனைதொடர்ந்து மந்தீப் சிங் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடுத்து இந்திய அணிக்கு 3-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலையை பெற்று கொடுத்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து தரப்பில் லியாம் அன்செல் முதல் கோல் அடித்தார். அதன் பின்னர் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் 46-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிய 7 நிமிடங்கள் இருந்த நிலையில் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் இங்கிலாந்து அணியின் நிக் பாண்டுராக் 47-வது மற்றும் 53-வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தும், பில் ரோப்பர் 50-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தனர். இறுதியின் 4-4 என்ற கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது. எளிதாக வெற்றி பெறும் என நினைத்த இந்திய அணி அடுத்தடுத்து கோல்களை விட்டுக்கொடுத்து ஆட்டம் சமனில் முடிந்ததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்