கனடா ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதி போட்டியில் திரிஷா - காயத்ரி ஜோடி தோல்வி

கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரில் கால்இறுதி போட்டியில் திரிஷா - காயத்ரி ஜோடி தோல்வியடைந்தது.;

Update: 2024-07-06 00:14 GMT

கோப்புப்படம்

கல்கேரி,

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கல்கேரி நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற கால்இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணை, தைவானின் பெய் ஷான் - ஹங் என்-சூ இணையுடன் மோதியது.

இந்த போட்டியில் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி 18-21, 21-19, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

Tags:    

மேலும் செய்திகள்