கனடா ஓபன் பேட்மிண்டன்: பிரியன்ஷு ரஜாவத் காலிறுதிக்கு முன்னேற்றம்

பிரியன்ஷு ரஜாவத் காலிறுதியில் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சனை எதிர்கொள்கிறார்.;

Update:2024-07-05 14:47 IST

கோப்புப்படம் 

ஒட்டாவா,

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் கனடாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் (ரவுண்ட் ஆப் 16) இந்தியாவின் முன்னணி வீரரான பிரியன்ஷு ரஜாவத், ஜப்பானின் டகுமா ஒபயாஷியை சந்தித்தார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரியன்ஷு ரஜாவத் 21-19, 21-11 என்ற செட் கணக்கில் ஜப்பானின் டகுமா ஒபயாஷியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். பிரியன்ஷு ரஜாவத் காலிறுதியில் முதல் நிலை வீரரான டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சனை எதிர்கொள்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்