ஆசிய உள்ளரங்க தடகளம்: கடைசி நாளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்
ஆண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் தங்கம் வென்றார்.;
டெக்ரான்,
11-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் தலைநகர் டெக்ரானில் 3 நாட்கள் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் 8 நிமிடம் 07.48 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
கிர்கிஸ்தானின் நுர்சுல்தான் வெள்ளிப்பதக்கமும் (8 நிமிடம் 08.85 வினாடி), ஈரானின் ஜலில் நசேரி வெண்கலமும் (8 நிமிடம் 09.39 வினாடி) வென்றனர். இதன் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா 9 நிமிடம் 26.22 வினாடிகளில் 2-வதாக வந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா 4 தங்கம், ஒரு வெள்ளியுடன் போட்டியை நிறைவு செய்துள்ளது.