குத்துச்சண்டை:
குத்துச்சண்டை பெண்கள் 50-54 கிலோ பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனை பிரீத்தியை வீழ்த்தி சீன வீராங்கனை அபார வெற்றிபெற்றார்.
அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்தபோதிலும் இந்திய வீராங்கனை பிரீத்திக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.
ஸ்குவாஷ்:
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு டி போட்டி 118ல் இந்தியா - ஹாங்காங் மோதின. இப்போட்டியில் 11-10, 11-8 என்ற நேர் செட்களில் ஹாங்காங் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. இந்திய அணியில் அபே சிங், அனஹத் சிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்
தடகளம்:
தடகளம் ஆண்கள் டெகாத்லான் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் 6ம் இடம் (கடைசி இடம்) பிடித்தார். ஒட்டுமொத்த தரவரிசையில் தேஜஸ்வின் 2ம் இடத்தில் உள்ளார்.
கேனோ ஸ்பிரிண்ட்:
கேனோ ஸ்பிரிண்ட் பெண்கள் கேனோ இரட்டையர் 200மீட்டர் இறுதிப்போட்டியில் இந்திய அணி 8ம் இடம் (கடைசி) பிடித்தது. இப்போட்டியில் சீனா தங்கப்பதக்கம் வென்றது.
கேனோ ஸ்பிரிண்ட்:
கேனோ ஸ்பிரிண்ட் பெண்கள் கயக் நால்வர் 500 மீட்டர் இறுதிப்போட்டியில் இந்திய அணி 8ம் இடம் (கடைசி) பிடித்தது. இப்போட்டியில் சீனா தங்கப்பதக்கம் வென்றது.
சாப்ட் டென்னிஸ்:
சாப்ட் டென்னிஸ் பெண்கள் குழு சுற்று ஏ போட்டி 2ல் இந்தியா - மங்கோலியா மோதின. இப்போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் மங்கோலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
சாப்ட் டென்னிஸ்:
சாப்ட் டென்னிஸ் ஆண்கள் குழு பிரிவு ஏ போட்டி 2ல் இந்தியா - தாய்லாந்து மோதின. இப்போட்டியில் 2-1 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தாய்லாந்து அபார வெற்றிபெற்றது.
வில்வித்தை:
வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் பிரவீன் - அபிஷேக் மோத உள்ளனர். இதன் மூலம் வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
வில்வித்தை:
வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் அரையிறுதி சுற்றில் இந்தியா - தென்கொரியா மோதின. இப்போட்டியில் தென்கொரிய வீரரை 150-146 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் பிரவீன் அபார வெற்றிபெற்றார்
இந்த வெற்றியின் மூலம் வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் இறுதிப்போட்டிக்கு பிரவீன் முன்னேறினார். இதனால், இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
வில்வித்தை:
வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் அரையிறுதி சுற்றில் இந்தியா - தென்கொரியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 147-145 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய வீரரை வீழ்த்தி இந்திய வீரர் அபிஷேக் வர்மா அபார வெற்றிபெற்றார்.
இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் அபிஷேக் வர்மா முன்னேறியுள்ளார். இதனால் இந்திய வீரர் அபிஷேக்கிற்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.