ஆசிய விளையாட்டு: பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்
ஆசிய விளையாட்டு தொடரின் பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.;
ஆசிய விளையாட்டு தொடரில் 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி குத்துச்சண்டை போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. ஆடவர் +92 கிலோ எடைப்பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நரேந்தரும் கஜகஸ்தானின் கம்ஷேபேக்கும் மோதினர். இதில், இந்தியாவுக்கு வெண்கல பதக்கத்தை நரேந்தர் வென்றார்.
ஆசிய விளையாட்டு தொடரின் பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. இந்திய வீராங்கனை அன்னுராணி 62.92 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்று அசத்தினார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் 1,500 மீட்டர் Decathlon போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீரர் தேஜஸ்வின் 7666 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். Decathlon போட்டியில் கடந்த 2011 ஆம் ஆண்டு பாரதிந்தர் சிங் வைத்து இருந்த சாதனையான 7658 புள்ளிகள் என்பதையும் தேஜஸ்வின் இன்று முறியடித்தார்.
ஆசிய விளையாட்டு போட்டி: மும்முனை தாண்டுதல் (Triple Jumb) போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. இந்தியாவின் பிரவீன் சித்திரவேல் தனது ஆறாவது முயற்சியில் 16.68m உயரம் தாண்டி வெண்கல பதக்கத்தை தனதாக்கினார்.
ஆசிய விளையாட்டு தொடரின் தடகள போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது. 800 மீட்டர் ஆண்கள் ஓட்டத்தில் இந்தியாவின் முகம்மது அப்சல் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.
ஆசிய விளையாட்டுப்போட்டியில் மகளிருக்கான 5,000 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 15:14.75 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கம் வென்று அசத்தினார்.
ஆசிய விளையாட்டு போட்டி; 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
ஆண்கள் தனிநபர் ஸ்குவாஷ் பிரிவு காலிறுதி போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல் அசத்தல் வெற்றியை பெற்றார். ஜப்பானின் ரியுனோசுகே சுகுவே வை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்திய சவுரவ் கோஷல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டி தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தென்கொரியாவின் லீ யுங்யூவை 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியாவின் தீபிகா பல்லிக்கல்/ ஹரிந்தர் பல் சிங் ஜோடி, பிலிப்பைன்ஸின் ஜெமிகா அரிபடோ/ராபர்ட் ஆண்ட்ரூ கார்சியா ஜோடியை 2-1 (7-11, 11-5, 11-4) என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதன் மூலம் இந்திய அணிக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.