ஆசிய விளையாட்டு: பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்

Update: 2023-10-03 00:57 GMT
Live Updates - Page 4
2023-10-03 04:38 GMT

வில்வித்தை:

வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் ஜோதி - அதிதி மோதினர். பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 149-146 புள்ளி கணக்கில் அதிதியை வீழ்த்தி ஜோதி அபார வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் இறுதிப்போட்டிக்கு ஜோதி முன்னேறினார். இதனால் இந்திய வீராங்கனை ஜோதிக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.

2023-10-03 04:29 GMT

கிரிக்கெட்:

டி20 கிரிக்கெட் ஆண்கள் காலிறுதி சுற்றில் இந்தியா - நேபாளம் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ஜெய்ஷ்வால் 100 ரன்கள் குவித்தார்.

இதனை தொடர்ந்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் நேபாளத்தை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. 

2023-10-03 04:12 GMT

பேட்மிண்டன்:

பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 32 பிரிவு போட்டி 7ல் இந்தியாவின் பிவி சிந்து சீன தைபே வீராங்கனையை எதிர்கொண்டார். ஆரம்ப முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனை பிவி சிந்து 21-10, 21-15 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனையை வீழ்த்தி அபார வெற்றிபெற்றார். 

2023-10-03 04:04 GMT

ஸ்குவாஷ்:

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு ஏ போட்டி 112ல் இந்தியா - ஜப்பான் மோதின. இப்போட்டியில் 2-0 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்திய அணியில் தீபிகா, ஹரிந்தர் பல் சிங் இடம்பெற்றிருந்தனர்.

2023-10-03 04:00 GMT

ஹாக்கி:

ஹாக்கி பெண்கள் பிரிலிமினெரி பிரிவு ஏ போட்டி 17ல் இந்தியா - ஹாங்காங் மோதின. இப்போட்டியில் 13-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

2023-10-03 03:22 GMT

பதக்க பட்டியல்:

ஆசிய விளையாட்டு தொடரில் 13 தங்கம், 24 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

2023-10-03 03:15 GMT

கேனோ ஸ்பிரிண்ட்:

கேனோ ஸ்பிரிண்ட் ஆண்கள் கேனோ இரட்டையர் 1,000 மீட்டர் போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 3:53.329 நிமிடங்களில் அடைந்து அர்ஜுன் சிங், சுனில் சிங் ஆகியோர் கொண்ட இந்திய அணி 3ம் இடம் பிடித்தது.

இதன் மூலம் கேனோ ஸ்பிரிண்ட் ஆண்கள் கேனோ இரட்டையர் 1,000 மீட்டர் பிரிவில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றது.

2023-10-03 03:06 GMT

வில்வித்தை:

வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் காலிறுதி சுற்று போட்டி 188ல் இந்தியா - கஜகஸ்தான் மோதின. இப்போட்டியில் கஜகஸ்தான் வீரரை 150-142 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் பிரவீன் அபார வெற்றிபெற்றார்

இந்த வெற்றியின் மூலம் வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் அரையிறுதி போட்டிக்கு பிரவீன் முன்னேறினார்.

2023-10-03 02:51 GMT

வில்வித்தை:

வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் காலிறுதி சுற்று போட்டி 187ல் இந்தியா - கஜகஸ்தான் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியின் இறுதியில் 147 - 147 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய வீரர் அபிஷேக் வர்மாவும், கஜகஸ்தான் வீரர் ஆண்ட்ரியும் சமநிலையில் இருந்தனர். இதனை தொடர்ந்து சூட் ஆப் முறையில் 10+ புள்ளிகள் பெற்று இந்திய வீரர் அபிஷேக் வர்மா அபார வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் அரையிறுதி போட்டிக்கு அபிஷேக் வர்மா முன்னேறினார்.

2023-10-03 02:40 GMT

கிரிக்கெட்:

டி20 கிரிக்கெட் ஆண்கள் காலிறுதி சுற்றில் இந்தியா - நேபாளம் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் ஜெய்ஷ்வால் 100 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் விளையாடி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்