தடகளம்:
தடகளம் ஆண்கள் 4x400 மீட்டர் ரிலே தொடர் ஓட்டம் ரவுண்ட் 1 - ஹீட் 1 தகுதிச்சுற்று போட்டியில் இந்திய அணி முதல் இடம் பிடித்தது. இதன் மூலம் ஆண்கள் 4x400 மீட்டர் ரிலே தொடர் ஓட்டம் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
தடகளம்:
தடகளம் பெண்கள் 800 மீட்டர் ஓட்டம் ரவுண்ட் 1 - ஹீட் 1 போட்டியில் இந்திய வீராங்கனை சந்தா முதல் இடம் பிடித்தார்.
தடகளம் பெண்கள் 800 மீட்டர் ஓட்டம் ரவுண்ட் 1 - ஹீட் 2 போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்மிலன் முதல் இடம் பிடித்தார்.
இதன் மூலம் பெண்கள் 800 மீட்டர் ஓட்டம் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனைகள் சந்தா, ஹர்மிலன் தகுதி பெற்றனர்.
தடகளம்:
தடகளம் ஆண்கள் டெகாத்லான் 100 மீட்டர் தடை ஓட்டம் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் 5ம் இடம் பிடித்தார்.
தடகளம் ஆண்கள் டெகாத்லான் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் 3ம் இடம் பிடித்தார்.
கபடி:
கபடி ஆண்கள் அணி குரூப் ஏ - கேம் 3 - போட்டி 5ல் இந்தியா - வங்காளதேசம் மோதின. இப்போட்டியில் 55 - 18 என்ற புள்ளி கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
கிரிக்கெட்:
ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் காலிறுதி போட்டியில் இந்தியா - நேபாளம் மோதி வருகின்றன. இதில், இந்திய அணி 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.
கபடி:
கபடி ஆண்கள் அணி குரூப் ஏ - கேம் 3 - போட்டி 5ல் இந்தியா - வங்காளதேசம் மோதி வருகின்றன. இப்போட்டியில் தொடக்கம் முதல் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 55-11 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
வில்வித்தை:
வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் காலிறுதி சுற்றில் இந்தியா - பிலிப்பைன்ஸ் மோதின. இப்போட்டியில் 149 - 143 என்ற புள்ளி கணக்கில் பிலிப்பைன்ஸ் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை அதிதி அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் அரையிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை அதிதி முன்னேறினார்.
கிரிக்கெட்:
கிரிக்கெட் காலிறுதி சுற்றில் இந்தியா - நேபாளம் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 1 ஓவர் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.
வில்வித்தை:
வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் காலிறுதி சுற்றில் இந்தியா - கஜகஸ்தான் மோதின. இப்போட்டியில் 147 - 144 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜோதி அபார வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் அரையிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை ஜோதி முன்னேறினார்.
பதக்க பட்டியல்:
ஆசிய விளையாட்டு தொடரில் 13 தங்கம், 24 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.