ஆசிய விளையாட்டு - ஹாட்ரிக் தங்கம் வென்ற இந்தியா..பதக்க பட்டியலில் 4-வது இடம்
ஆசிய விளையாட்டு தொடரில் 21 தங்கம், 32 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 86 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு தகுதி
இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் சிங்கப்பூரின் என்ஜி ஜூ ஜி/ஜோஹான் பிரஜோகோவை 21-7, 21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தது.
நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா/சூ வூய் யிக்கை எதிர்கொள்கிறார்கள்.
பெண்கள் மல்யுத்தம்: 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் ஆண்டிம் பங்கல் ..!!
ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான மல்யுத்தப்போட்டியின் 53 கிலோ எடை பிரிவில் மங்கோலியாவின் பேட்-ஒசிரின் போலோர்டுயாவை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் ஆன்டிம் பங்கால் வெண்கலம் வென்று அசத்தினார்.
ஸ்குவாஷ் ஆண்கள் பிரிவு: வெள்ளி வென்றார் இந்திய வீரர் சவுரவ் கோசல்
ஆண்களுக்கான ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் சவுரவ் கோசல் 1-3 என்ற கணக்கில் ஈன் யோவ் என்ஜியிடம் தோற்றார்.
இதன்படி ஸ்குவாஷ் ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் மலேசியாவின் ஈன் யோவ் என்ஜி 1-3 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய வீரர் சவுரவ் கோசலை வீழ்த்தினார்.
முன்னதாக இந்தியாவின் தீபிகா பல்லிக்கல்/ ஹரிந்தர் பால் சிங் ஜோடி, மலேசியாவின் அய்பா பிண்டி அஸ்மான்/ முகம்மது சியாபிக் பின் முகத் கமல் ஜோடியை 8-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
கிரேக்க-ரோமன் மல்யுத்தம்: வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியாவின் நவீன் தோல்வி
கிரேக்க-ரோமன் மல்யுத்தப்போட்டியின் 130 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நவீன் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கொரியாவின் கிம் மின்சோக் ஐந்து புள்ளிகளை பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
ஆசிய விளையாட்டு பெண்கள் ஆக்கி: சீன அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி
இன்று நடைபெற்ற பெண்கள் ஆக்கி போட்டியில் சீன அணிக்கு எதிரான போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் சீனா பெண்கள் ஆக்கி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென்கொரியா- ஜப்பான் அணிகள் மோத உள்ளன. இதில் தோல்வியடையும் அணி நாளை நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்காக போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது.
கபடி: ஜப்பான் அணியை வீழ்த்தி குருப் -ஏ பிரிவில் முதலிடம் பிடித்தது இந்திய ஆண்கள் அணி
இன்று நடைபெற்ற போட்டியில் ஜப்பான் அணியை 56-30 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி குருப் -ஏ பிரிவில் இந்திய ஆண்கள் அணி முதலிடம் பிடித்தது.
நாளை நடைபெறும் அரையிறுதியில், குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பாகிஸ்தானுடன் இந்தியா அணி மோத உள்ளது.
ஆண்களுக்கான காம்பவுண்டு வில்வித்தை
வில்வித்தை ஆண்கள் காம்பவுண்டு பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிரவீன் ஓஜஸ், அபிஷேக் வர்மா மற்றும் பிரதமேஷ் ஜவகர் ஆகியோர் அடங்கிய அணி தென்கொரியாவை 235-230 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது.
வில்வித்தை ஆண்கள் காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரவீன் ஓஜஸ், அபிஷேக் வர்மா மற்றும் பிரதமேஷ் ஜவகர் ஆகியோர் அடங்கிய அணி சீன தைபே அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 234-224 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் தென்கொரியா அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றுள்ளது. இந்தியாவின் தீபிகா பல்லிக்கல்/ ஹரிந்தர் பால் சிங் ஜோடி, மலேசியாவின் அய்ஃபா பிண்டி அஸ்மான்/ முகம்மது சியாஃபிக் பின் முகத் கமல் ஜோடியை 8-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா வென்றுள்ள 20-வது தங்கம் இதுவாகும்.
மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பூஜா கெலாட் 0-10 என்ற கணக்கில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.