ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரைஇறுதிக்கு தகுதி
நேற்று நடந்த கால்இறுதி சுற்றில் லக்சயா சென், மலேசிய வீரர் லீ ஜியாவுடன் மோதினார்.;
பர்மிங்காம்,
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி சுற்று ஒன்றில் 18-ம் நிலை வீரர் லக்சயா சென் (இந்தியா), மலேசிய வீரர் லீ ஜி ஜியாவுடன் மோதினார்.
இந்த போட்டியில் லக்சயா சென் 20-22, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் லீ ஜியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.