இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று! காமன்வெல்த் போட்டிகளுக்கான பயிற்சி பாதிப்பு
இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் இரண்டு வீரர்கள், மூன்று துணை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.;
பெங்களூரு,
இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் இரண்டு வீரர்கள், மூன்று துணை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக காமன்வெல்த் ஆக்கி தொடருக்கான பயிற்சி தடைபட்டுள்ளது.இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று! காமன்வெல்த் போட்டிக்கான பயிற்சி பாதிப்பு
குர்ஜந்த் சிங் மற்றும் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் வீரர்கள் மற்றும் குழுவினருக்கு நேற்று காலை ஆடி-பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் தொற்று உறுதியானவர்களில் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக தற்போது வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். இந்த முகாம் ஜூலை 23 அன்று நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து காமன்வெல்த் தொடரில் பங்கேற்ற இந்திய ஆக்கி அணி பர்மிங்ஹாம் செல்கிறது.