ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் 5-வது வெற்றி பெற்று அசத்தல்
8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆக்கி இந்தியா லீக் தொடர் ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது.;
ரூர்கேலா,
8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆக்கி இந்தியா லீக் தொடர் ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி, டெல்லி எஸ்.ஜி. பைபர்சை எதிர்கொண்டது.
தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.
6-வது லீக் ஆட்டத்தில் ஆடி 5-வது வெற்றியை சுவைத்த தமிழ்நாடு அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த தொடரில், இன்றிரவு 8.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சூர்மா கிளப் அணி, கோனாசிகாவை எதிர்கொள்கிறது.