ஆக்கி இந்தியா லீக்: உ.பி. ருத்ராஸ் அணியை வீழ்த்தி தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி
நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - உ.பி. ருத்ராஸ் அணிகள் மோதின.;
ரூர்கேலா,
6-வது ஆக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.) தொடர் ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - உ.பி. ருத்ராஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் உ.பி. ருத்ராசை வீழ்த்தி 2-வது வெற்றியை சுவைத்தது.
தமிழ்நாடு டிராகன்ஸ் அணி சார்பில் சுதேவ் ஆட்டத்தின் 48-வது நிமிடத்திலும், தாமஸ் 60-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.