தென் ஆப்பிரிக்கா தொடர்; இந்திய ஆக்கி அணி வெற்றியுடன் தொடக்கம்
இந்திய ஆக்கி அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 நாடுகள் இடையிலான தொடரில் விளையாடி வருகிறது.;
கேப்டவுன்,
இந்திய ஆக்கி அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 நாடுகள் இடையிலான தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.
அதன்படி நேற்று தொடங்கிய இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிரான்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4 கோல்கள் அடித்து அசத்தியது. ஆனால் பிரான்ஸ் அணியால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை. முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.
இந்திய அணி தரப்பில் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்களும், லலித் உப்பதேய் மற்றும் ஹர்டிக் சிங் ஆகியோர் தலா 1 கோலும் அடித்து அசத்தினர்.