இந்தியாவில் ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி இந்தியாவில் நடப்பது இது 4-வது முறையாகும்.;
லாசானே,
24 அணிகள் பங்கேற்கும் 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டியை (21 வயதுக்குட்பட்டோர்) அடுத்த ஆண்டு (2025) டிசம்பர் மாதம் இந்தியாவில் நடத்துவது என்று சுவிட்சர்லாந்தில் நேற்று நடந்த சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி இந்தியாவில் நடப்பது இது 4-வது முறையாகும். ஏற்கனவே 2013-ம் ஆண்டில் டெல்லியிலும், 2016-ம் ஆண்டில் லக்னோவிலும், 2021-ம் ஆண்டில் புவனேஸ்வரிலும் நடந்துள்ளது.
இதில் 2016-ம் ஆண்டில் இந்தியா சாம்பியன் கோப்பையை வென்று இருந்தது. இந்தியாவில் இந்த போட்டி எங்கு நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.