ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2022-11-16 00:11 IST

Image Courtesy: Hockey India 

புதுடெல்லி,

இந்திய ஆண்கள் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 26ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான 23 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஆக்கி அணியை, ஆக்கி இந்தியா நேற்று அறிவித்துள்ளது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்தியாவில் தொடங்கவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான எப்ஐஎச் ஆக்கி ஆடவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த ஐந்து போட்டிகளில் விளையாடவுள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணி:

கோல்கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ் மற்றும் கிரிஷன் பகதூர் பதக்

டிபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ் (துணை கேப்டன்), ஜுக்ராஜ் சிங், மன்தீப் மோர்,  நிலம் சஞ்சீப், வருண் குமார்

மிட்பீல்டர்கள்: சுமித், மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், ஷம்ஷேர் சிங், நீலகண்ட சர்மா, ராஜ்குமார் பால், முகமது. ரஹீல் மௌசீன், ஆகாஷ்தீப் சிங், குர்ஜந்த் சிங்.

முன்கள வீரர்கள்: மன்தீப் சிங், அபிஷேக், தில்ப்ரீத் சிங், சுக்ஜீத் சிங்

Tags:    

மேலும் செய்திகள்